பூதக்கண்ணாடியால் தேடுகிறேன்
பூர்வீக முகம் பொறித்த பூரிப்பான உன்னை..
பொதுமக்களும் வாங்கி குவிக்கும் பொன்மகளின் கண்ணை..
வழித்து தலைவாரியும் வம்பு பண்ணி வழிந்திறங்கும் நெற்றிமுடியை நான் என்ன சொல்வது…
சிந்தனைக்கப்பாற்பட்டு செதுக்கிய செவிகளிடம் நான் எப்படி சொல்வது..
உன் கண்கள் உலகிற்கே வெண்மையும் கருமையும் பூசுவதை உன்னிடத்தில் எப்போது சொல்வது..
அடியே..
உன் நாசியிடம் மூச்சுவாங்க பாசிபடிந்து பழுதுபட்டிருக்கும் என்னை எக்கணம் தொட்டு துடைப்பாய்…
உன்னிதழ்களையே நாளிதழ்களாக நாளும் வாசிப்பு எனக்கு..
வாசகனாய் மாறி உன்னுதட்டுரேகையில் காதல் படிக்க விருப்பு..
காற்றலையே…
உன்குரலில் பாட ஓராயிரம் பட்சைகள் வரிசையாய் இருக்கு..
கூந்தல் நுனியே…
உன் மோகம் தலையேறி எனக்குள் புரையேறி குரல்வளையில் சிக்கு..
இலைத்துணுக்கே..
என்னை மறுத்து வெறுத்து மரப்பிசினாய் வெளிதள்ளுமளவுக்கு உனக்கு வெறுப்பு..
போதுமடி இது…
நானிருக்கும் வரை நீ எனக்கு தீரா மது..
நாளிருக்கும் வரை உன்னைவிட வேறு எது…
