Home கவிதை நானாகத்தானே தேடிக்கொண்டேன்

நானாகத்தானே தேடிக்கொண்டேன்

by சங்கர்

இப்போதெல்லாம் நாம்
வெறும் பணம் கொட்டும்
இயந்திரமாகத்தான் பார்க்கப்படுகின்றோம்

சொல்வதொன்று செய்வதொன்று
என்ற நிலையே அதிகமாகிக்கொண்டுவருகிறது

தேவை வேறு விருப்பு வேறு
என்ற வேறுபாடே அற்றுவிட்டது

இப்போ என்ன, எல்லாம் இருக்கிறது
அதனால் கூடிவிட்டது என்ற பேச்சே சலித்துவிட்டது

பிரச்சனைகள் வரும்போது என் விருப்புகளே
அதற்கு காரணம் என்ற பேச்சு வேறு
முள்ளாய் முளை விடுகிறது

நம் உணர்வுகள் மதிக்கப்படா இடத்தில்
எதற்காக மண்டியிட்டு வாழ்கிறேன்

என்னால் எல்லாவற்றிற்குமாக
விடை காண முடிந்தாலும்

அவற்றிற்கான கேள்விகளையே
மீண்டும் மீண்டும் கேட்டுக் கொண்டிருக்கிறேன்

எதற்காக இந்த வேடமிட்ட வாழ்வு
நானாகத்தானே தேடிக் கொண்டேன்!

You may also like

Leave a Comment