என் அழகை எதிர்பார்க்காத நீ
என் சிரிப்பை ரசித்த நீ
என் அந்தஸ்தை கேட்காத நீ
என் குறள் மட்டும் கேட்ட நீ
என்னை நேரில் சந்திக்க ஆசைபட்டநீ
என் முகத்தில் தீக்காயம் இருந்தும் கூட நீ என்னை விரும்புகிறாயே!
இது தான் உண்மையான காதல்
பூதக்கண்ணாடியால் தேடுகிறேன்
பூர்வீக முகம் பொறித்த பூரிப்பான உன்னை..
பொதுமக்களும் வாங்கி குவிக்கும் பொன்மகளின் கண்ணை..
வழித்து தலைவாரியும் வம்பு பண்ணி வழிந்திறங்கும் நெற்றிமுடியை நான் என்ன சொல்வது…
சிந்தனைக்கப்பாற்பட்டு செதுக்கிய செவிகளிடம் நான் எப்படி சொல்வது..
உன் கண்கள் உலகிற்கே வெண்மையும் கருமையும் பூசுவதை உன்னிடத்தில் எப்போது சொல்வது..
அடியே..
உன் நாசியிடம் மூச்சுவாங்க பாசிபடிந்து பழுதுபட்டிருக்கும் என்னை எக்கணம் தொட்டு துடைப்பாய்…
உன்னிதழ்களையே நாளிதழ்களாக நாளும் வாசிப்பு எனக்கு..
வாசகனாய் மாறி உன்னுதட்டுரேகையில் காதல் படிக்க விருப்பு..
காற்றலையே…
உன்குரலில் பாட ஓராயிரம் பட்சைகள் வரிசையாய் இருக்கு..
கூந்தல் நுனியே…
உன் மோகம் தலையேறி எனக்குள் புரையேறி குரல்வளையில் சிக்கு..
இலைத்துணுக்கே..
என்னை மறுத்து வெறுத்து மரப்பிசினாய் வெளிதள்ளுமளவுக்கு உனக்கு வெறுப்பு..
போதுமடி இது…
நானிருக்கும் வரை நீ எனக்கு தீரா மது..
நாளிருக்கும் வரை உன்னைவிட வேறு எது…
உனக்கென்று ஒருநாள் கற்பனை நாடினேன் பெண்ணே…
அதை இருளில் கோர்த்தேன்..
உன்னிடத்தில், உனக்காக சேர்த்து சூடினேன்…
உடலுருவம் இல்லாமல் உறுப்பில்லாமல் பல கற்பனைகள்..
உன் முகம் தானடி அதற்கு லட்சணம் வார்த்தது…
வாய்ப்பினால் அடைந்த கற்பனையெல்லாம் என்னிடம் நீ காட்டிய காய்ப்பினாலடி…
உன் வெறுப்பில் ஓர் விநோதம் இங்கே…
மூடன் போல் முடிவில்லாது சிந்திக்கிறேன்…
மூடத்தனத்தில் மூழ்கி முத்திரை பதிக்கிறேன்..
வரையறை இல்லாமல் இது வளரத்தான் போகிறது…
வருங்காலத்தில் இது மலரத்தான் போகிறது….
இவ்வுலகம் இதைக் கண்டு மிரளத்தான் போகிறது..
உலகில் பறந்து கிடைக்கும்
படைப்புகள் அத்தனைக்கும்
முடிவு உண்டு , அது நட்சத்திரமோ
கோள்களோ இல்லை , கல்லோ
மண்ணோ, கடலோ , சமுத்திரமோ
இல்லை மனிதரோ, மிருகமா ,தாவரமோ
ஆனால் இவற்றைப் படைத்தவன் அவனோ
ஆதி, அந்தம் இல்லாதவன் ….அதனால்
இருப்பான், இல்லாததுபோல் இருப்பான்
பார்த்தும் நாம் உணராமல் ……..அதனால்
அவன் இல்லை என்பார் சிலர்
இப்போதெல்லாம் நாம்
வெறும் பணம் கொட்டும்
இயந்திரமாகத்தான் பார்க்கப்படுகின்றோம்
சொல்வதொன்று செய்வதொன்று
என்ற நிலையே அதிகமாகிக்கொண்டுவருகிறது
தேவை வேறு விருப்பு வேறு
என்ற வேறுபாடே அற்றுவிட்டது
இப்போ என்ன, எல்லாம் இருக்கிறது
அதனால் கூடிவிட்டது என்ற பேச்சே சலித்துவிட்டது
பிரச்சனைகள் வரும்போது என் விருப்புகளே
அதற்கு காரணம் என்ற பேச்சு வேறு
முள்ளாய் முளை விடுகிறது
நம் உணர்வுகள் மதிக்கப்படா இடத்தில்
எதற்காக மண்டியிட்டு வாழ்கிறேன்
என்னால் எல்லாவற்றிற்குமாக
விடை காண முடிந்தாலும்
அவற்றிற்கான கேள்விகளையே
மீண்டும் மீண்டும் கேட்டுக் கொண்டிருக்கிறேன்
எதற்காக இந்த வேடமிட்ட வாழ்வு
நானாகத்தானே தேடிக் கொண்டேன்!
