நகமில்லாத விரலைகளை
நினைத்துப்பார்க்கவே பயமாக இருக்கிறது
விதவிதமான நகப்பூச்சுகள்
வாங்கிக் குவித்து
அழகுபார்க்கும் அவளுக்கு
மட்டுமல்ல
சொரியச் சொரியப்
புண்ணாகிபோன அரிப்பால்
அவதியுறும் அவள் கணவனுக்கும்கூடத்தான்.
**
மெய்யன் நடராஜ்
அன்பை வெளிப்படுத்தும் நிறம் சிகப்பு
எந்த நிறத்தாலும் உணர வைக்க முடியாதது நட்பு
பள்ளி நட்பு
கடலில் கரையலாம் உப்பு
எதிலும் கரையாதது நட்பு
நண்பராக இடையிலும் வரலாம்
அவர் இறுதி வரையிலும் வரலாம்
மலர்ச்சி தரும் அன்பின் சின்னம்
நட்பின் பிரியா வண்ணம்
குறைகளை கண்டுபிடிக்கும் குடும்பத்தினர் உறவு
குறைகளை திருத்துவதே பள்ளி நட்பின் கருவு
உலகின் முக்கோணங்களிலும்
அன்பே வெல்லும்
வானத்தில் கண்சிமிட்டிய ஒற்றை விண்மீனை
ஒருவரும் அறியாது உனக்காய் களவாடி
கைக்குட்டைக்குள் பொதிந்து வைத்தேன்….
நீயும் நானும் தன்னந்தனியே ஏகாந்தவெளியில் சந்திக்கையில்
இதயம் சுமந்த அன்பை
முத்தமழையால் நீ பொழிகையில்
ஈடாய் உனக்கதை பரிசளிக்க….
விரைவில் வந்துப் பெற்றுக்கொள்….
வானம் என்னைத் தேடுகிறது….
பறிகொடுத்த தன் விண்மீனை மீட்டெடுக்க……
நினைவுகளை கிளறி
கடந்த காலத்தை
கடைந்தெடுத்து
தவில் பாடி
ஒற்றைக் கனவில்
படகோட்டும் பலம்
தனிமைக்கே உரித்து
சிந்தனைத் திறன்
செயலாய் உருவெடுக்க
உடலும் உள்ளமும்
நின் மதிகொள்ள
இடம் கொடுத்து
வரம் தருவது
தவம் பெறும்
தனிமையில்தான்
சுய சிந்தனைக்கு
தாள்ப்பாள் இட்டு
காப்ரேட் கம்பனிகளின்
காசோலைக்கு கவிழ்ந்து
காலமோட்டும் காலமதில்
கொரோனா கொடுத்த
வைர விடுதலை
தனிமைப்படுத்தலில் தனிமை!
கச்சிதமாய் கைப்பற்ற
இதுவே தருணம்
சிந்தனை சிறக்க
இதுவே தருணம்
புதிய முய்ற்சிகள் சிறக்க
இதுவே தருணம்!
