• முகப்பு
  • கவிதை
    • காதல்
    • நட்பு
    • புது கவிதை
    • இறைவன்
  • திருக்குறள்
  • பொன்மொழிகள்
  • விமர்சனம்
    • நூல் விமர்சனம்
    • திரை விமர்சனம்
  • அறிவியல்
Tamil Poems
யாதும் ஊரே யாவரும் கேளிர்
இறைவன்

தேடுகின்றேன் உனை

by சங்கர் December 26, 2019
written by சங்கர்

அனலைப் படைத்து அதனை உடலில் புகுத்தி
உடலைக் காக்க நிரம்ப நீரைச் செலுத்தி
நீரினால் குருதியைக் கரைத்து நரம்பால் சுழலவிட்டு
நவரங்கமும் பரவ இருதயத்தை ஆக்கி
நாள் தோறும் புதுப்பிக்க களைப்பைக் கொடுத்து
களைப்பு நீங்க உறக்கமும் உறு பசியையும் கொடுத்து
உற்சாகம் அடைய சிறு மூளையையும் படைத்து
சிறப்பாக சிந்திக்க மனதை எங்கோ உடலில் வைத்து
ஒவ்வொரு நாளும் ஒருவாறு நாலு நிகழ்வைத் தந்து
ஒவ்வொன்றிலும் பெரிய சிறிய அனுபவங்காட்டி
தீர்வால் தெளிவையூட்டி தெளிவால் திடத்தைக் காட்டிய
தேவர்களுக்கெல்லாம் தேவே தேடுகின்றேன் உனை
தேடுவோர் மன மகிழ தேவையான உருவெடுத்து வா…
– – – நன்னாடன்.

0 comment
0 FacebookTwitterPinterestEmail
புது கவிதை

நடக்குமா

by சங்கர் December 26, 2019
written by சங்கர்

நடக்குமா?
பேதங்களே!
வழிவிட்டு ஒதுங்குங்கள், வாழ்வில் ஒன்று பட்டு நின்றிட!

தடைகளே!
ஓரமாகச் செல்லுங்கள், உலகை உயர்த்தி நிமிர்த்திட!

இருக்கும் இடம், சுழலும் பூமியில்,
இருக்குது, சுற்றிய வண்ணம்!
இணையும் எட்டு திசையும், ஏற்றத் தாழ்வு அகற்றுவதால்!
வகுப்பும், தரமும், பிரிவுதரும்!
பேதத்தை விரட்டிவிட்டால், கைகோர்த்து நிற்கும்,
மனித இனம்!

மனித நேயத்தை, மையப்புள்ளியாக்கி,
விட்டுக் கொடுத்தலை, ஆரமாக்கி,
அன்பு, கருணையை விட்டமாக்கி,
அமைதி, ஆனந்தம் ஆதாரமாக்கி,
கைகோர்த்து நிற்கும், மனித இனம்!
நடக்குமா?

0 comment
1 FacebookTwitterPinterestEmail
நட்பு

மிருதுளாவின் மழலை

by சங்கர் December 26, 2019
written by சங்கர்

யாழினிது… குழலினிது…
அதனினும் இனிது
மிருதுளாவின் மழலை…
அதனைக் கேட்கும் ஆச்சிக்கு
ஏதுமில்லை கவலை…

உலகைக் கட்டிப்போடப் போகும்
குரல் விருட்சத்தின் விதை
இங்கு முளைத்து எழுகிறது…

கணீர் பேச்சில் உலகக்
கவனம் ஈர்க்க
தமிழ்த்தாய் வாழ்த்தில்
ஒத்திகை ஒன்று
ஆச்சியின் பயிற்சியில்
அரங்கேறுகிறது…

புயலோடு போட்டிபோட
தென்றலோடு நட்பு பாராட்ட
நற்றமிழ் ஒன்று
நடை பயில்கிறது இன்று…

மொத்தத்தில்…
இன்பத்தேன் வந்து
பாயுது காதினிலே…
மிருதுளாவின்
மழலைத் தமிழினிலே…

0 comment
0 FacebookTwitterPinterestEmail
நட்பு

நினைவுகள்

by சங்கர் December 26, 2019
written by சங்கர்

இருக்கும் வரை கவலையில்லை
பிரிந்த பிறகு துணையுமில்லை
நினைவுகள் மட்டும் துணையாக
நெஞ்சம் முழுவதும் எண்ணமாக
எங்கோ நீ இங்கே நான்

0 comment
0 FacebookTwitterPinterestEmail
கவிதைகாதல்

யார்தடுத்தாலும்

by சங்கர் December 26, 2019
written by சங்கர்

வடித்து வைத்த சிற்பம் உயிர்
கொண்டு வந்ததோ

படைத்துவிட்ட பிரம்மன் அவன்
வரம் வேண்டி தந்ததோ

எடுத்துக்கொள்ளத் தோணுதே
யார்வீட்டு சொத்து இது

உரியவர் என்ற உறவில் எவரேனும்
இருந்தால்

வறியவன் போல்போய் யாசகம்
கேட்பேன்

மறுத்து ஏதேனும் பேச்சு வந்தது
என்றால்

ராவணன் போல சிறையெடுப்பேன்
யார் தடுத்தாலும்

0 comment
0 FacebookTwitterPinterestEmail
கவிதைகாதல்

அன்பே என்னிடம் நீ கூறு

by சங்கர் December 26, 2019
written by சங்கர்

மலறில் ஊறும் தேனாய் என்னை
மசக்கையோடு அள்ள நீ வா
நாரில் கோர்த்த பூக்கள் போல
என்னை உன்னோடு கோர்க்கிறேன்
வாசம் வீசும் அக் கணம் போல
வாழ்வு முழுதும் மணக்கிறேன் ?
அன்பே என்னிடம் நீ கூறு…

0 comment
1 FacebookTwitterPinterestEmail
Newer Posts
Older Posts

Recent Posts

  • அவள் பார்வை
  • எனது தேவதை
  • வெறுப்பது யாராக இருந்தாலும்..
  • நம்முடன் வாழ்வோரைப் புரிந்து கொள்வதற்கு
  • முழுமதி

Popular Posts

  • வெறுப்பது யாராக இருந்தாலும்..

  • முழுமதி

  • மிருதுளாவின் மழலை

  • அன்பே என்னிடம் நீ கூறு

  • எங்கே போகிறோம்?

@2021 - All Right Reserved. Designed and Developed by PenciDesign


Back To Top
Tamil Poems
  • முகப்பு
  • கவிதை
    • காதல்
    • நட்பு
    • புது கவிதை
    • இறைவன்
  • திருக்குறள்
  • பொன்மொழிகள்
  • விமர்சனம்
    • நூல் விமர்சனம்
    • திரை விமர்சனம்
  • அறிவியல்